நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு:* இரண்டாவது நாளாக தாக்குதல்


 "நக்கீரன்' வாரம் இருமுறை இதழ் அலுவலகம் மீது, அ.தி.மு.க.,வினர் நேற்று, இரண்டாaவெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வினர், தமிழகம் முமுவதும், நக்கீரன் இதழை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகம் முன், வேளச்சேரி எம்.எல்.ஏ., அசோக் தலைமையில், அ.தி.மு.க.,வினர், ராயப்பேட்டையில் உள்ள, நக்கீரன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென, அலுவலகத்திற்குள் புகுந்து, ஊழியர்களை விரட்டியடித்து கல்வீசித் தாக்கினர். இதைத்தொடர்ந்து, அசோக் எம்.எல்.ஏ., உள்ளிட்டோரைக் கைது செய்து, கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் போலீசார் விடுவித்தனர். இரண்டாவது நாளாக தாக்குதல்: நேற்று பகல், 12 மணியளவில், அ.தி.மு.க.,வினர், 50 பேர் கும்பலாக, நக்கீரன் அலுவலக வாயிலுக்கு வந்தனர். திடீரென செங்கல், கருங்கற்களை அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில், கார் கண்ணாடி, கட்டட கண்ணாடிகள் நொறுங்கின. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

நக்கீரன் கோபால் மீது வழக்கு: புதுப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க., ஆதரவாளர் அன்பு என்பவர், ஜாம்பஜார் போலீசில் புகார் செய்தார். அதில், "முதல்வர் மீது அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார். இந்த புகாரை அடுத்து, "நக்கீரன் கோபால் மீது, கொலை மிரட்டல், மன உளைச்சல் ஏற்படுத்தி, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை உருவாக்குதல், உயர் பதவியில் உள்ளோருக்கு களங்கம் ஏற்படுத்துதல், கையால் தாக்குதல், ஆயுதம் வைத்திருந்தல், சட்ட விரோதமாக கூடுதல் என, ஆறு பிரிவுகளில் சென்னை, ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு: நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நக்கீரன் மேலாளர் சுரேஷ்குமார், ஜாம்பஜார் போலீசில் புகார் செய்திருந்தார். இதை அடுத்து, அசோக் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், அவதூறாக பேசுதல், தாக்கி சேதம் செய்தல், ஆயுதம் வைத்திருத்தல் என, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நக்கீரன் அலுவலகம் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மறியல்: நக்கீரன் அலுவலகம் மீதான தாக்குதல் நடந்துள்ள நிலையில், அப்பகுதியில் இரண்டு நாட்களாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், நேற்று மதியம், சென்னை திருவல்லிக்கேணி, மீர்சாகிப் தெரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின் வாரிய பகுதி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். மின் வினியோகத்தை முறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

"தார்மீக ஆதரவு கொடுங்கள்' "நக்கீரன்' கோபால் வேண்டுகோள்: "நக்கீரன்' கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:நக்கீரன் அலுவலகம் மீதான தாக்குதலை நாடே அறியும். போலீஸ் உயர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கேட்ட போது, குறைந்த எண்ணிக்கையில் நிறுத்தப்பட்ட போலீசார் முன் அராஜகம் நடந்தது.மின் வாரியத்தினர் நேற்று முன்தினம் மாலை, நக்கீரன் அலுவலக மின் இணைப்பை துண்டித்து விட்டனர்.இந்த தாக்குதலை கண்டித்த மீடியாக்கள், அரசியல்வாதிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.நேற்று காலை குடிநீர் வாரிய ஊழியர்கள், அலுவலக குடிநீர் இணைப்பை துண்டிக்க முயன்றனர்; "உத்தரவு உள்ளதா, இல்லையென்றால் காரணத்தை எழுதிக் கொடுத்துவிட்டு துண்டியுங்கள்' என்று தெரிவித்தோம். இந்நிலையில், திடீரென, 12 மணியளவில், அ.தி.மு.க.,வினர் உருட்டுக்கட்டை, கற்களுடன் வந்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், ஆண்,பெண் பணியாளர்கள் அலுவலகத்தில் முடங்கியுள்ளனர்.அரசோ, நக்கீரன் பத்திரிகை செயல்படக் கூடாது என்ற முனைப்போடு, சகல திசைகளில் இருந்து, அஸ்திரங்களை நக்கீரன் மீது ஏவி வருகிறது.நெருக்கடியான நிலையில், அரசு மற்றும் போலீஸ் துறையின் போக்கை, பத்திரிகை, "டிவி' உள்ளிட்ட ஊடகத்தினர், அரசியல் தலைவர்கள், சமுதாய, மனிதநேய அமைப்பினர், பொதுமக்களும் கண்டிப்பதோடு, நக்கீரனுக்கு தார்மீக ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு, நக்கீரன் ஆசிரியர் கோபால் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கேட்டு நக்கீரன் கோபால் மனு : "நக்கீரன்' அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பம் மற்றும் அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு கேட்டு, "நக்கீரன்' ஆசிரியர் கோபால், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.நக்கீரன் அலுவலகத் தாக்குதல் குறித்து சட்ட நடவடிக்கைக்காக, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலை, "நக்கீரன்' ஆசிரியர் கோபால் தன் வழக்கறிஞர் மூலமாக தொடர்பு கொண்டார்.தலைமை நீதிபதி, அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம், "நக்கீரன்' கோபாலின் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது:நக்கீரனுக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே முன் விரோதம் எப்போதும் உண்டு. அந்த கட்சியின் பிரமுகர்களான, மதுசூதனன், கலைராஜன் எம்.எல்.ஏ., ஆகியோரின் ஆட்கள், ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை தாக்கினர்; இதுகுறித்து, ஜாம்பஜார் போலீசில் புகார் அளித்துள்ளேன்.என் அலுவலகத்தின் மீது கற்கள், கட்டைகளை வீசி சேதம் விளைவித்திருப்பதை, அதில் குறிப்பிட்டுள்ளேன். அலுவலகத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க கேட்டுள்ளேன்.இப்பிரச்னையில், கோர்ட்டு தலையிடாவிட்டால் எனக்கும், என் ஊழியர்களுக்கும் உயிர்ப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் சூழல் ஏற்படும்.எனவே, என் வீடு, அலுவலகத்துக்கு வந்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வேண்டும். மேலும், வீடு, குடும்பத்தினர், அலுவலகம், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க, போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.விரைவில், இம்மனு விசாரணைக்கு வருகிறது.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்