வடிவேலு பட பாணியில் போலீஸ் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவர் !

நாகர்கோவிலில் குடிபோதையில் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் தர்மஅடி கொடுத்து கவனித்தனர். சினிமா ஒன்றில் மாமூல் கேட்கும் போலீசாக நடித்த வடிவேலுவை கடத்தி சென்று வேறு மாநிலத்தில் இறக்கி விடுவது போன்ற காட்சி வரும். இதனை கண்டு சிரிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. இந்த காட்சியை பார்த்தோ என்னவோ நாகர்கோவிலில் குடிபோதையில் வந்த ஆட்டோ டிரைவர் ஏட்டை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவில் மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலையில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். பொதுவாக போலீசார் மடக்கி பிடிக்கும் போது சிலர் வேகமாக தப்பி செல்வது நடக்கும். 

இதனால் சில போலீசார் அதிகாரிகள் நிற்கும் இடத்திற்கு சற்றே தள்ளி நின்று தப்பி வருபவர்களை மடக்குவதும் நடக்கும். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் ஆய்வாளர் ஏட்டு நின்ற வாகனத்திற்கு சற்று தள்ளி மப்டியில் நின்றிருந்தார். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்திய ஏட்டு டிரைவரிடம் ஊத சொல்லியுள்ளார்.

டிரைவர் வாயை ஊத அடித்த “கப்பில்“ஏட்டுக்கும் தலையை சுற்றியது. சரி.. சரி.. குடிச்சிருக்கே வண்டியை ஐயாக்கிட்ட விடு எனக்கூறி ஆட்டோவில் ஏறி ஏட்டு அமர்ந்தார். ஆட்டோவை ஸ்டார்ட் செய்த டிரைவர் என்ன நினைத்தாரோ.... 

ஆட்டோ ஒழுகினசேரியை நோக்கி வேகமாக சீறிச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஏட்டு தனது செல்போன் மூலம் ஆய்வாளரிடம் ஐயா, என்னை போதையில ஆட்டோ டிரைவர் கடத்திட்டு போறான் உடனே புறப்பட்டு வாங்க என கதறினார். பின்னர் வீரம் வந்தவராக ஆட்டோ டிரைவரின் கழுத்தை இறுக்கினார். மேலும் தன்னை கடத்தி செல்வதாக கூச்சல் போட்டார். கழுத்தை பிடித்தில் மூச்சு திணறிய ஆட்டோ டிரைவர் திமுக தலைமை அலுவலகம் அருகே ஆட்டோவை நிலை தடுமாறி நிறுத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதியில் வீடு மற்றும் கடைகளில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். 

அதேநேரம் ஆய்வாளரும் போலீஸ் படையும் அங்கு ஆஜர். பின்னர் என்ன ஏண்டா... மவனே ஏட்டையாவையே கடத்துற அளவுக்கு தைரியமா எனக்கேட்டு 5 போலீசார் சுற்றி நின்று நடுரோட்டிலேயே ஆட்டோ டிரைவரை வீடு கட்டி விளையாடினர். சிறிது நேரம் கவனித்த போலீசாருக்கே களைப்பும், வலியும் ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த ரவுண்டிற்காக ஆட்டோ டிரைவரை ஸ்டேசனுக்கு பேக்கப் செய்தனர்.போலீஸ் விசாரணையில் சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் வடசேரி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்