விஜயுடன் போட்டி போடும் மைனா ஹீரோ!


ரஜினி, விஜய் ஆகிய இரண்டு பேரின் படங்கள் வெளியாகிற நாளில், மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட,
சம்பந்தப் பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் நிறையவே யோசிப்பார்கள். இதைவிட புதுமுகங்கள் அறிமுகமாகும் படங்களை சுத்தமாக வெளியிட மாட்டார்கள். மீறி வெளியிட்டால் கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டி கிணற்றில் குதிக்கிற கதைதான்.
முக்கியாக விஜய் படம் வெளியாகிற நாளில் அவரது படத்துடன் மோதி ஜெயிக்க வேண்டும் என்று துணிந்து சாதிக்துக்காட்டியிருக்கும் பெரிய நாயகன் சூர்யா மட்டும்தான்.

தற்போது மைனா படத்தின் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த அறிமுக ஹீரோ விதார்த், தனது 'கொள்ளைக்காரன்' படத்தின் மூலம் நேரடியாக விஜயுடன் மோத இருக்கிறார். “கதை என்னைக் காப்பாற்றும். வேறு யாருக்கவும் எதற்காகவும் நான் பயப்பட வேண்டிய அவசியம் எனகில்லை” என்கிறார் விதார்த்!
அறிமுக இயக்குநர் தமிழ்ச்செல்வன் இயக்கியிருக்கும் கொள்ளைக்கரான் படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் ஜோஹன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஆடியோ மார்கெட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருகும் சூழ்நிலையில், விஜயின் நண்பன் வெளியாக இருக்கும் ஜனவரி 13-ஆம் தேதி ( இன்று ) கொள்ளைக்காரன் படத்தை வெளியிடுகிறார்கள்.
ஷங்கர், விஜய் என்று இந்த பெரிய கூட்டணியில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தோடு மோத இருக்கும் 'கொள்ளைக்காரன்' படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் 250 திரையரங்குகளை அள்ளிக் கொடுத்திருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்