எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ( drugs )


எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ( drugs )




























இன்றைய தினம் மதுவை பற்றிய விவாதங்கள் அதிகம். அதில் முக்கியமாக பேச படுவது

தமிழக அரசுக்கு மது வியாபாரம் நிறைய வருவாய் ஈட்டி தருவது என்பது. தொழிலாளர்கள தங்களது ஊதியத்தை பெரும்பகுதி குடித்து குடும்பத்தை கவனிக்காமல் விடுகிறார்கள். அரசின் பார்வை கள்ளசாராயம் தடுக்க பட வேண்டுமானால் அரசு நெறிப்படுத்திய சாராயம் விற்பதே நன்று வருவாய் வருவது இரண்டாம் பட்சம் அதை கூட மக்களுக்கு இலவச மின்சாரம் தொலைகாட்சிபெட்டி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது பஸ் பாஸ் கொடுப்பது போன்ற காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது. 

மதுவை பற்றிய பாடம், வாங்கிய பின் பாட்டிலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. படிக்கும்போதே மதுவை பற்றியோ, உடலை பற்றியோ சரியான உளவியல் ரீதியான கற்பித்தல் என்பது இதுவரை இல்லை என்பதே உண்மை. மது அருந்தாதவன் யோக்கியன் என்ற முடிவுக்கும் வர முடியாது. உள்ளம் கெட்டு வீசுவது மூக்கால் நுகர முடிவதில்லை. அதிகமாக மது அருந்தியவன் நினைவற்று விடுகிறான், மன ரீதியான கெடுதல் நிதானமாக எல்லா பாவங்களையும் செய்ய வைத்து விடுகிறது...

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தில்தான் வழக்கம்போல் மதுவையும் குணத்தையும் ஒப்பு நோக்கும் இயல்பு காணப்படுகிறது. ஏழைகளின் சூழ்நிலையில் குடும்ப உணவுக்கு உடைக்கும் வழி செய்யாமல் வேலைக்கும் செல்லாமல் குடித்து கிடப்பதுதான் பிரச்சினைக்குரியதாகிறது. மேல்தட்டு வர்க்கம் குடும்பத்தோடு குடித்து கும்மியடிப்பது கூட ஒரு பிரச்சினை கிடையாது.

அளவுக்கு மீறினால் அமுதம் கூட நஞ்சு என்று சொல்லப்படும்போது குடி எப்போது சொல்லையும் செயலையும் சிந்தனையையும் சிதைக்கிறதோ அப்போது நஞ்சையும் விட அதிக வேலைசெய்யும். குடி குடியை கெடுக்கும் என்ற வார்த்தைகள் உயிர் பெறும் உடல் நலத்தையும் கெடுக்கும்.



மதுவை ஒழிப்போம் உடல் மற்றும் குடும்பநலத்தை  பாதுகாப்போம் .


                       பின்குறிப்பு  : படித்தவர் அனைவருக்கும் நன்றி )

Comments

  1. சாராய சுனாமி என்றொரு டிவிடி வந்துள்ளது. paadam.in சென்றால் தெரியும். பாடம் ஒரு மாத இதழ். அந்த டிவிடியைப் பார்த்தவன் மீண்டும் குடிக்கச் செல்ல மாட்டான். சென்றால் அது அவன் தலை எழுத்து. குடிக்கும் உங்கள் நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள். பார்க்கச் சொல்லுங்கள். அதில் மேலும் மூன்று படங்களும் உள்ளன. அனைத்தும் சமூகச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்தான். வலைப்பதிவர்களில் யாரும் குடிக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் ஓர் இயக்கம் துவங்கலாம். நான் முதல் உறுப்பினர் ஆவேன்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்