'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்ச்சி தகவல்


இன்று உலகம் முழுதும் கணினி பயன்படுத்துவோர் 'பிளாக்' எனப்படும் வலைத்தளத்தை பார்க்காதவர்களும், பயன்படுத்தாதவர்களும் மிகக் குறைவே. மிகப் பெரிய சமூக வலைத் தளமான 'பேஸ்புக்' கை அடுத்து பலரும் பிலாகைப் பயன் படுத்துகின்றனர்.
இந்த 'பிளாக்' மூலம் பலரும் பல சமூக பிரச்சனைகளையும், தம் சொந்த அனுபவங்களையும், நகைச்சுவை, சினிமா பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.


இந்த பிளாக் மூலம் பலருக்கு புதிய நண்பர்களும் கிடைக்கின்றனர் . பல தெரியாத தகவல்களையும் தெரிந்து கொள்ள இந்த பிளாக் உதவுகிறது.


இந்த பிளாக் மூலம் பல நன்மைகள் இருந்தாலும் சிலர் இதற்க்கு அடிமையாகி விடுகின்றனர்.


மது போன்ற பழக்க வழக்கங்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த போதை தரக்கூடிய சமாச்சாரங்களை பயன் படுத்தவில்லை எனில் உடல் நடுங்க ஆரம்பிக்கும், மனம் எப்பாடுபட்டாவது அதை பயன்படுத்த வேண்டும் என துடிக்கும். இதையே அப்பழக்கத்திர்க்கு அடிமையாதல் என்கிறோம்.


அதுபோல சிலருக்கு பிளாகில் இல்லையெனில் மனம் அதைப் பற்றியே சிந்திக்கும். வேறு வேலைகள் செய்ய மனம் போகாது.  சில பல காரணங்களால் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை எனில் பிரவுசிங் சென்டர் சென்றாவது பிளாகில் நேரத்தை செலவிட மனது துடிக்கும்.


இதையே பிலாகிர்க்கு அடிமையாதல் என்கிறோம். உறவுகளே பிளாக் போன்றவைகள் டைம் பாஸ் க்காக மட்டும் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் வாழ்கையாகாது.


பிளாக் மூலம் நல்ல நட்புகளை வளர்ப்போம் .   

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்