உலகில் ஏழரை கோடி இளைஞர்களுக்கு தொழில் இல்லை


வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு மற்றும் மோசமான தரத்தில் உள்ள தொழில்கள் காரணமாக ஒரு தலைமுறை இளைஞர்கள் பெரும் அச்சநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

உலகெங்கும் ஏழரைக் கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குறைந்த ஊதியம் தரும் தொழில்களில் அகப்பட்டிருக்கிறார்கள்.
இளைஞர் போராட்டங்கள் அதிகரித்தல், அரசியல் திட்டத்தின் மீதான அவநம்பிக்கை போன்ற நீண்ட காலப் பிரச்சினைகள் இதனால் உருவெடுக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
புள்ளிவிபரங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நம்புகின்ற சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், வேலை இல்லாத இளைஞர்கள் கற்கை நெறிகளில் ஈடுபட்டோ அல்லது வீடுகளுக்குள் முடங்கியிருந்தோ காலத்தைக் கழிப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றது.
இன்னும் பலர் நிலைமை மாறுமென்று காத்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்