பரமக்குடி சம்பவம் : காவற்துறையினர் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு?! : தமிழக அரசு


பரமக்குடியில் போலிஸ் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவம்
தொடர்பில், விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவினால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்ட நிவாரண உதவித் தொகை ரூபாய் 1 லட்சம் தவிர, மேலும் ரூபாய் 4 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்ட நிவாரண உதவித் தொகையான ரூபாய் 15,000/- உடன் கூடுதலாக ரூபாய் 15,000/- உடனடியாக வழங்க அவர் ஆணையிட்டுள்ளதாகவும் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினரில் ஒருவருக்கு, கருணை   அடிப்படையில், அரசு வேலை வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் எனவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினத்தையொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது எனவும்,  தடையை மீறி, பரமக்குடி நோக்கிச் சென்ற ஜான் பாண்டியனை காவல் துறையினர் வல்லநாட்டில் கைது செய்ததை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டு, வன்முறையில் ஈடுபட்டதால், தற்காப்பு நடவடிக்கையாகவே, காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதன் போதே 6 பேர் 'துரதிருஷ்டவசமாக' உயிரிழந்துள்ளனர் எனவும் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கிறது

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்