நான் பேசத்தொடங்கினால் பல பேர் சிறை செல்வார்கள் : ஆ.ராசா


ஸ்பெக்ரம் ஊழல் தொடர்பில், நிரந்தரமாக விடுதலை ஆக விரும்புகிறேன்.
அதனால் தான் இன்னமும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் ஏதும் செய்யவில்லை. நான் பேச தொடங்கினால் பல பேர் சிறை செல்ல நேரிடும் என முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். நேற்று நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது :


12 ஆண்டுகளாக எம்.பியாக இருந்துவிட்டேன். சிறையில் 12 மாதங்கள் அனுபவித்துவிட்டேன். இரண்டிலும் நிறைய கற்றுக்கொண்டுவிட்டேன். நான் தற்காலிக விடுதலையை விரும்பவில்லை. இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

நான் இதுவரை ஜாமின் கேட்டு எந்த நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யவில்லை. கனிமொழிக்கு ஜாமின் கிடைத்தால் பின்பு அதை பற்றி யோசிகிறேன். ஆனால் நான் வாய் திறக்கும் போது, பலர் சிறை செல்ல வேண்டியிருக்கும். நான் சிறையில் நிரந்தரமாக இருந்துவிடுவேன் என நீங்கள் கருதிவிட கூடாது. சிறையில் நிறைய புத்தகங்களை படித்து முடித்து விட்டேன். ஏராளமான பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். 2ஜி வழக்கில் அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்களை மீண்டும் மீண்டும் படித்து வருகின்றேன். அவற்றை நன்கு புரிந்து கொண்டால் தான் என்னால் மேற்கொண்டு நீதிமன்றத்தில் வாதிட முடியும்.

நான் விடுதலையானதும் பல ஆச்சரியமான விடயங்கள் நடைபெறலாம். நிறைய புத்தகம் எழுதவுள்ளேன். இந்த புத்தகம் சிலரின் வழக்கிற்கு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்