அஜீத்துக்கு வந்த புது தலைவலி


க்ளைமாக்சில் வரும் ஆவேச அஜீத் போலவே கொடூர முகம் காட்டி தன் ரசிகர்களைஅடக்கி வைத்தார் அஜீத். அந்தளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தினார்கள் அவர்களும். தலைவா... அரசியலுக்கு வா என்பதுதான் அவர்களின் கோஷமாக இருந்தது. சில பகுதிகளில் அஜீத்தின் அனுமதி இல்லாமலே அவரது முகம் பொறித்த கொடியுடன் ஓட்டு வேட்டையாடி தல-யின் தலையில் சூட்டை கிளப்பினார்கள் அவர்கள்.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதத்தில் ஒரேயடியாக தன் ரசிகர் மன்றத்தை கலைத்தார் அஜீத். இந்த நிலையில்தான் மீண்டும் அவர்களை கிளறிவிட்டிருக்கிறார் மங்காத்தா தயாரிப்பாளர்
துரை.தயாநிதி. இவரது ட்விட்டர் செய்திக்கு பிறகு சும்மாயிருப்பார்களா ரசிகர்கள் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது பலருக்கு.
அப்படியென்ன சொல்லியிருக்கிறார் அதில்?
அஜீத் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. படத்தின் நாயகன் இல்லாமல் 'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. அஜீத் சார் நடித்து வெளிவந்த படங்களில் ' மங்காத்தா ' படம் தான் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. அப்படத்தினை எனது நிறுவனம் தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்.
தல ரசிகர்கள் அவரை 'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவிற்கு அழைத்து வருவதாக இருந்தால், 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறோம் " என்று கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து மீண்டும் அஜீத்தின் வீட்டில் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Comments

Popular posts from this blog

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா