முதிர்கன்னி

ஏழை வீட்டு மூத்த பெண்ணாய் 
அழகே இல்லாத துர்பாக்கியவதியாய் நானும் 
அழகாய் நான்கு தங்கைகளும் .


என்னை பெண்பார்க்க வந்தவர்களுக்கோ 
தங்கைகளை மணமுடிக்க ஆசை 
உள்ளுக்குள் அழுதும் ..புறம் சிரித்தும் 
சம்மதம் சொன்னேன் தங்கைகள் வாழ்விற்கு 
என் வயது தோழிகளுக்கோ .... 
பள்ளியிலும் இடுப்பிலும் வயிற்றிலும் குழந்தைகள் 
இரண்டாம் மூன்றாம் தாரமாய் கூட 
என்னை மணமுடிக்க வருவாரில்லையே 
யாரை குத்தம்சொல்லுவது 
என்னை பெத்த தாய் தந்தையினயோ 
அழகாய் என்னை படைக்க மறந்த இறைவனையோ 
ஆசைகளையும் ஏக்கங்களையும் 
எனக்குள் புதைத்து 
இரவெல்லாம் கண்ணீரால் என் தலையணையை நனைத்து 
மௌனமாய் அழுகிறேனே 
முதிர் கன்னி நான் ...

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்